முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்) 
இந்தியா

கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு: முதல்வர் பினராயி விஜயன் வேதனை

கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு என முதல்வர் பினராயி விஜயன் வேதனையாக கூறியுள்ளார்...

DIN

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 90 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இது கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவு என முதல்வர் பினராயி விஜயன் வேதனையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இது கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவாகும்.

வயநாடு, கோழிக்கோட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மண்ணில் புதைந்தும் எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இதனால், 350 வீடுகளி மின் தடை ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை இணைந்து பணியாற்றி வருகின்றன. வயநாட்டில் உள்ள 45 உள்பட மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT