வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா 
இந்தியா

வயநாடுக்கு விரையும் ராகுல், பிரியங்கா!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட வயநாட்டுக்கு விரையும் ராகுல், பிரியங்கா..

பிடிஐ

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளைப் பார்வையிட காங்கிரஸ் தலைவர்களான ராகுலும், பிரியங்காவும் நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையையடுத்து, வடநாடு மாவட்டத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில்,

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முழு ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

வயநாடு நிலச்சரிவு குறித்து ராகுல் வெளியிட்ட செய்தியில்,

வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அங்கு மீட்பு நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

SCROLL FOR NEXT