வாக்களித்தார் மம்தா பானர்ஜி!
கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தா பானர்ஜி வாக்களித்தார்.
மகக்ளவை தேர்தல் 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று(ஜூன் 1) மாலை முடிவடைந்துள்ள நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள பபானிப்பூரில் தனது வாக்கினை சனிக்கிழமை பதிவு செய்தார்.
கொல்கத்தாவின் ஹரிஷ் சட்டர்ஜி தெருவில் வசிக்கும் பானர்ஜி, பிற்பகல் 3.55 மணியளவில் மித்ரா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு, வெளியே வந்த அவர், கைகளை உயர்த்தியபடி வெற்றிச் சின்னத்தை காண்பித்துவிட்டுச் சென்றார்.
கொல்கத்தாவின் தக்ஷின் மக்களவைத் தொகுதியில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான பபானிபூரில் மம்தா பானர்ஜி எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.