செய்தியாளர் சந்திப்பில் சஞ்சய் சிங் 
இந்தியா

கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆம் ஆத்மி

தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றார் சஞ்சய் சிங்.

DIN

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இன்று (ஜுன் 3) தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். கருத்துக்கணிப்புகள் பொய்யானவை என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களை மட்டுமின்றி தேர்தல் ஆணையத்தையும் தவறான திசையில் வழிநடத்திச் செல்ல வழிவகுக்கும். நாளை (ஜுன் 4) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறைக்குச் செல்லும் முன்பு பேசும்போது, ஊடகங்கள் மூலம் பாஜக பொய்யான கருத்துக்கணிப்புகளை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்ற கணிப்பு பொய்யானது என்றும், ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே உள்ளதாகவும், ஆனால், பாஜக 33 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்திருந்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜுன் 1ஆம் தேதி நடைபெற்றது. அன்று மாலை பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT