இந்தியா

கர்நாடகத்தில் அதிக இடங்களை வெல்வோம்: சித்தராமையா நம்பிக்கை!

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்..

DIN

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 15-20 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உலகமே உற்றுநோக்கிவரும் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாகியுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என ஊடகக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாநிலத்தில் பாஜக-ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெறும் என்று கணித்துள்ளது. கர்நாடகத்தில் அதிக இடங்களை வெல்வோம். 15-20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சித்தராமையா இங்குச் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, இது மோடியின் ஊடக கருத்துக்கணிப்பு என்று ராகுலும், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கார்கே கூறியிருந்தார். நான் அதை ஆதரிக்கிறேன்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களைக் கைப்பற்றி, மாண்டியாவில் ஒரு கட்சி ஆதரித்த சுயேச்சை வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்தது.

ஜனதா தளம் (எஸ்) இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஹாசன், மாண்டியா, கோலார் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

பெண்களையும் இளைஞர்களையும் நம்புகிறேன்: மு.க. ஸ்டாலின்

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

SCROLL FOR NEXT