இந்தியா

எம்.பி., பதவியை தக்கவைத்துக்கொண்ட வேட்பாளர்கள்!

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இம்முறையும் பதவியை தக்கவைத்துக்கொண்ட வேட்பாளர்கள் குறித்து காணலாம்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இம்முறையும் பதவியை தக்கவைத்துக்கொண்ட வேட்பாளர்கள் குறித்து காணலாம்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 291 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் தங்கள் பதவியை தக்கவைத்துக்கொண்டனர்.

அமித் ஷா

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா வெற்றி பெற்றார். கடந்த 2019ஆம் ஆண்டு 5.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சோனல் ராமன்பான் பட்டேல் 2,66,256 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால், அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று பெருவாரியாக தனது பதவியை தக்கவைத்துக்கொண்டார்.

அனுராக் தாக்குர்

ஹிமாசலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் அனுராக் தாக்குர் மீண்டும் வெற்றி பெற்று பதவியை தக்கவைத்துள்ளார். அவர் தொடர்ந்து 3வது முறையாக இத்தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சத்பல் ரைசதாவை விட 1,82,357 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இம்முறை தேர்தலில் 6,07,068 வாக்குகளை தாக்குர் பெற்றார்.

கிரண் ரிஜிஜூ

அமைச்சர் கிரண் ரிஜிஜூ மேற்கு அருணாச்சல் தொகுதியில் போட்டியிட்டார். அதில் 1,00,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் நபம் டூகி 1,04,679 வாக்குகளை மட்டுமே பெற்றார். கிரண் ரிஜிஜூ 2,05,417 வாக்குகளைப் பெற்றார்.

அர்ஜுன் ராம் மேக்வால்

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் தனது எம்.பி. பதவியை தக்கவைத்துக்கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் தொகுதியில் போட்டியிட்ட அவர், 55711 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோவிந்த்ராம் மேக்வால் 511026 வாக்குகளைப் பெற்றார்.

ஜோதிராதித்ய சிந்தியா

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதியில் போட்டியிட்டார். இதில் 540929 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் யாத்வேந்திர ராவ் தேஷ்ராஜ் சிங் 382373 வாக்குகளைப் பெற்றார். இவர் பாஜக சார்பில் 5வது முறையாக போட்டியிட்டுள்ளார்.

கிஷண் ரெட்டி

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் 49,944 வாக்குகள் வித்தியாசத்தில் கிஷண் ரெட்டி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தனம் நாகேந்தர் 4,23,068 வாக்குகள் பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

2014ம் ஆண்டுதேர்தலில் பாஜக 303 இடங்களிலும், 2004ஆம் ஆண்டு தேர்தலில் 284 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்!

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

SCROLL FOR NEXT