ஒடிசாவின் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிற நிலையில் இரண்டிலும் பாஜக முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் ஆரம்பகட்ட முடிவுகளின்படி 21 மக்களவை தொகுதிகளை கொண்ட ஒடிசாவில் பாஜக 17 மக்களவை தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மாநிலத்தின் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 57 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இருபது ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சி புரிந்து வரும் முதல்வர் நவீன் பட்நாய்க் பிஜு தளம் 38 தொகுதிகளிலும் காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
2019 தேர்தலில் பாஜக 8 மக்களவை தொகுதிகளிலும் 23 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.