பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி ANI
இந்தியா

பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி!

சோனியா காந்தி பிரியங்கா காந்தி சந்திப்பு: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

DIN

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேராவின் இல்லத்திற்கு வாக்கு எண்ணிக்கை நிலவரங்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாவின் இல்லத்தில் இருந்து காலை 10 மணி போல புறப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி 1,64,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதே போல கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி 242 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 295 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா கூட்டணியின் கட்சிகளான சமஜ்வாதி 33 தொகுதிகளிலும் திரிணமூல் 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT