அமைச்சராக பொறுப்பேற்கும் சிவராஜ் சிங் செளஹான் 
இந்தியா

மத்திய அமைச்சரானார் சிவராஜ் சிங் செளஹான்!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

DIN

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் செளஹான் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு சிவராஜ் சிங் வெற்றி பெற்றிருந்தார். மாநில முதல்வராக இருந்த அவர், தற்போது மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

தற்போது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT