அமைச்சரானார் ஹரியாணா முன்னாள் முதல்வர்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரான மனோகர் லால் கட்டார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஹரியாணா மாநிலத்தில் கர்னல் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஹரியாணா மாநித்தின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.
Advertisement
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.