முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள்!

வீடுகளை நோக்கி தீவிரவாதிகள் திறந்தவெளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள்!

வீடுகளை நோக்கி தீவிரவாதிகள் திறந்தவெளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 ஜூன், 2024 at 5:17 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் வீடுகளை நோக்கி தீவிரவாதிகள் திறந்தவெளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்திற்குட்பட்ட சைதா, ஹிராநகர் பகுதிகளில் காட்டிற்குள் இருந்தபடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ரெய்சி பகுதியில் பக்தர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளில் இருந்தபோது துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சைதா பகுதி குடியிருப்புவாசிகள் குறிப்பிடுகின்றனர். இரண்டு அல்லது மூன்று பேர் குடியிருப்பு பகுதிகளை நோக்கி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், வெளியே வர வேண்டாம் என குடியிருப்புவாசிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் காவல் துறையினருடன் எல்லை பாதுகாப்புப் படையினரும் இணைந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீடுகள் சேதமடைந்ததாகவும், எனினும் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ரெய்சி பகுதியில் சமீபத்தில், சுற்றுலாப் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுயாகமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →