ஜூன் 24-ல் கூடுகிறது நாடாளுமன்றம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 24-ஆம் தேதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மக்களவைக் கூட்டத்தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு, மக்களவைத் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 264-ஆவது மாநிலங்களவை கூட்டத்தொடர் ஜூன் 27 தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன் 72 மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.