தெலங்கானாவில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வடமாநிலத்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் 6 வயது சிறுமி, அரிசி ஆலையில் பணிபுரியும் தனது தாயுடன், ஆலைக்கு வெளியே தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர், இரவு 11 மணியளவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பல்ராம் என்பவரால் சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருகிலிருந்த புதர்களின் இடையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலையும் செய்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமியின் தாயார் நள்ளிரவில் எழுந்தபோது, சிறுமி காணாமல் போனதைக் கண்டு, அருகிலிருந்த சக தொழிலாளர்களுடன் தேடத் தொடங்கியுள்ளார். அப்போது, அருகிலிருந்த புதர்களின் இடையில் சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டுள்ளனர். பின்னர், கொலை செய்த பல்ராமை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில், பல்ராம் சிறுமியை தோளில் தூக்கியபடி, அருகிலுள்ள இருண்ட பகுதியில் புதர்களுக்கு அருகே நடந்து செல்வது தெரியவந்தது. பின்னர், பல்ராம் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலையும் செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.