ANI
இந்தியா

ஆணவம் வந்ததால் 241-ஆக குறைத்துவிட்டார் ராமர்! ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்

“நாட்டின் பெரும் கட்சியாக இருந்தாலும், தேவையான வெற்றியை கடவுள் பறித்துவிட்டார்.”

DIN

ராமரை வணங்குபவர்களுக்கு ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றியை 241-ஆக ராமர் குறைத்துவிட்டதாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்தரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.

ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இந்தரேஷ் குமார், கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் பாஜக மற்றும் ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் இந்தரேஷ் குமார் பேசியதாவது:

"ராமரை வணங்கிய கட்சிக்கு படிப்படியாக ஆணவம் வந்ததால், அவர்களின் வெற்றி 241-ஆக குறைந்துவிட்டது. இருப்பினும், தனிப் பெரும் கட்சியாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு தேவையான வெற்றி கடவுளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ராமர் நம்பிக்கை இல்லாமல் எதிர்த்தவர்களுக்கு ஆட்சி கிடைக்கவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தும் 234 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அவர்கள் அனைவரும் இணைந்தும் இரண்டாம் இடம்தான் பெற முடிந்தது.

ராமர் யாரையும் கைவிடமாட்டார். அனைவருக்கும் நீதி வழங்குவார். ராமர் மக்களை காப்பாற்றுவார். அவர், ராவணனுக்குகூட நன்மையை செய்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உண்மையான சேவகர் ஆணவத்தைக் காட்டி மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT