இந்தியா

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி: 8 நக்சல்கள் சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்..

DIN

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் நான்கு மாவட்டங்களில் போலீஸார் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், நக்கல்களுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்கல்களைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர், கான்கேர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அங்குத் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT