இந்தியா

காருக்குள் நீச்சல்குளம்: யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கேரளத்தில் காருக்குள் நீச்சல்குளம் அமைத்து சாலையில் ஓட்டிய யூடியூபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

கேரளத்தில் யூடியூபர் டி.எஸ்.சஞ்சு என்கிற சஞ்சு டெக்கி (28) என்பவரின் யூடியூப் காணொளி கடந்த மாதம் வைரலானதைத் தொடர்ந்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை மோட்டார் வாகனத் துறை வாழ்நாள் முழுக்கத் தடை செய்துள்ளது.

சஞ்சு டெக்கி என்ற யூடியூபர், தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட காணொளியில், ’ஆவேஷம்’ திரைப்பட பாணியில் காருக்குள் நீச்சல் குளம் ஒன்றை அமைத்து, தன் நண்பர்களுடன் இருப்பது போலவும், இளநீர் பருகுவது போலவும் காணொளி வெளியிட்டிருந்தார். நெரிசலான சாலைகளில் கார் செல்வது காணொளியில் பதிவாகியிருந்தது.

ஓட்டுநரின் இருக்கை மற்றும் இஞ்சின் அருகே தண்ணீர் புகுந்ததால் அவர்கள் காரை நிறுத்தித் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல தரப்புகளிலும் விமர்சனம் எழுந்ததால் மோட்டார் வாகனத் துறை சார்பில் சஞ்சுவுக்கு சம்மன் அனுப்பி மே 29 அன்று ஆஜராகுமாறு தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான யூடியூபரின் விளக்கத்தை மறுத்த ஆலப்புழா சாலைப் போக்குவரத்து அதிகாரி, சஞ்சுவின் ஓட்டுநர் உரிமம், அவரது கார் உரிமம் மற்றும் காரை ஓட்டிய அவரது நண்பர் சூரியநாராயணனின் ஓட்டுநர் உரிமத்தையும் இன்று ரத்து செய்துள்ளார்.

யூடியூபர் சஞ்சுவின் பழைய காணொளிகளிலும் அவர் தொடர்ந்து சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதுத் தெரிய வந்ததால் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக மோட்டார் வாகனத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விரும்பினால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சஞ்சுவைத் தவிர, அவரது நண்பர்கள் சூரியநாராயணன் (29), அபிலாஷ் கோபி (28), ஸ்டான்லி கிறிஸ்டோபர் (28) ஆகியோர் மீதும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஆறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT