இந்தியா

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பலி!

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றை வயது குழந்தை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சூரஜ்புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஒன்றரை வயது பெண் குழந்தையான ஆர்வி விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, 500 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை நிலைதடுமாறி விழுந்தது. இதையடுத்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தை 50 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து 17 மணி நேர போட்டதிற்குப் பிறகு இன்று அதிகாலை சுயநினைவின்றி குழந்தை மீட்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT