ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு உரிய நீரைப் பெறுவதற்கு இந்தியா கூட்டணியின் ஆதரவைத் தரவேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களுடன் நிகழ்த்திய கூட்டத்தில் உரையாற்றிய சிங், தேசிய தலைநகரில் தண்ணீர் நெருக்கடிக்கு பாஜக ஹரியாணாவுக்கு நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.
தில்லிக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் ஹரியாணா பவனுக்கு வெளியே போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
பாஜக ஆளும் ஹரியாணாவில் இருந்து தில்லியின் பங்கு தண்ணீரைப் பெறுவதற்காக இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 21 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். ஆனால் பாஜக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.