முகப்பு
இந்தியா

ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு!

ஆந்திர சட்டப் பேரவைக்கு புதிய தலைவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Updated On : 22 ஜூன், 2024 at 6:32 AM
அய்யனப்பத்துருடு
பகிர்:

ஆந்திரத்தின் 16 ஆவது சட்டப்பேரவைக்கு புதிய தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ சி. அய்யனப்பத்துருடு ஒருமனதாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு வெள்ளிக்கிழமை மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மூன்று மனுக்களும் அய்யனப்பத்துருடுவின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டதாக தலைமைச் செயல் அதிகாரி பி.பி.கே. ராமாச்சார்யலு தெரிவித்துள்ளார்.

16 ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.

வெள்ளிக்கிழமை பதவியேற்காத மூன்று எம் எல் ஏக்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஆந்திரத்தின் மொத்தமுள்ள 175 எம் எல் ஏக்களும் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்திற்கு செல்வதால் சட்டப் பேரவையில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →