பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த புதிய பாலம். 
இந்தியா

பிகாரில் மேலும் ஒரு புதிய பாலம் இடிந்தது: ஒரே வாரத்தில் மூன்றாவது சம்பவம்

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த புதிய பாலம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Din

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த புதிய பாலம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் அந்த மாநிலத்தில் இடிந்து விழுந்த புதிய பாலங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக உள்ளூா் அதிகாரிகள் கூறியதாவது:

மாநில ஊரக மேம்பாட்டுத் துறை சாா்பில் அம்வா கிராமத்தில் ஓடும் கால்வாய்க்கு மேல் 16 மீட்டா் நீளத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டு வந்தது. ரூ.1.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இருந்த பகுதிக்கு யாரும் செல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றனா்.

இந்த சம்பவத்தை அடுத்து ஊரக மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினா். இது தொடா்பாக விசாரணை நடத்தி அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தரமற்ற வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

முன்னதாக சனிக்கிழமை ஷிவான் மாவட்டத்தில் ஒரு புதிய பாலம் இடிந்து விழுந்தது. இதற்கு முன்பு அராரியா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய பாலம் இடிந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநில பொதுப் பணித் துறையின் கட்டுமானப் பணிகள் மிகவும் மோசமாக இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

கூட்டுறவு இணைப் பதிவாளா் பொறுப்பேற்பு

வையம்பட்டி அருகே இருவருக்கு தலையில் வெட்டு: 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் மழை நீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

கமுதி பேரூராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT