மல்லிகார்ஜுன கார்கே  கோப்புப் படம்
இந்தியா

10 ஆண்டுகளில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடக்கம்: மல்லிகார்ஜுன கார்கே

12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் 72% சிறு, குறு தொழில்கள் பூஜ்ஜிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

DIN

கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

பணமதிப்பிழப்பு, தவறான வரிமுறை (ஜிஎஸ்டி), பெருந்தொற்று காலத்தில் நிர்வாகத் திறமையின்மை போன்றவை சிறு, குறு தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் பிரிவுகள் மீது தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துகிறது.

முறைசாரா தொழில் பிரிவுகள் இணைக்கப்படாததன் விளைவாக கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 54 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட தரவுகளில் உள்ளன.

ஆனால் உண்மை என்னவெனில், 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன.

12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் 72 சதவீத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பூஜ்ஜிய வளர்ச்சியை அடைந்துள்ளன.

ஜிஎஸ்டி வரிமுறையில் உள்ள பல்வேறு அடுக்குகள் சிறு, குறு தொழில் துறைகளை செயலிழக்கச் செய்துள்ளது. முறை சாரா தொழில்களில் ஊக்கத் தொகையின்மை, போதிய விழிப்புணர்வின்மை போன்றவை இவற்றின் அழிவை தீவிரப்படுத்தியுள்ளது.

விவசாயத்தில் 35 பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால், விவசாயிகளின் வருவாய் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் குடும்பங்களின் சேமிப்பு 0 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

இருப்பினும், மனித உயிர்களைச் சேராதவர் என தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர், தங்கள் ஜிஎஸ்டியால் நுகர்வோர் பயன் அடைந்து வருவதாகக் கூறிவருகிறார்.

தற்பெருமை பேசுவதில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு, பொருளாதார குழப்பத்தின் உண்மைத்தன்மையை பாருங்கள் என கார்கே பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம்!

திருவள்ளூா் பகுதிகளில் பலத்த மழை

இறுதிச் சுற்றில் ஸ்வியாடெக்-அலெக்சாண்ட்ரோவா!

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா்: செப். 26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்!

SCROLL FOR NEXT