முகப்பு
இந்தியா

மக்களவை தொடங்கியது: எம்பியாக மோடி பதவியேற்றார்!

மக்களவை இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி.

Updated On : 24 ஜூன், 2024 at 11:19 AM
எம்பியாக மோடி பதவியேற்றார்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையின் இடைக்காலத் தலைவர் பா்த்ருஹரி மகதாப், எம்பியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. அவை தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவருக்கு உதவும் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டவர்கள், மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

Advertisement

அதன்பிறகு, ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த புதிய எம்.பி.க்களும் வரிசையாக பதவியேற்கவுள்ளனர்.

நாளையும் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள்(ஜூன் 26) மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜூலை 27-ஆம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றவுள்ளார்.

இடைக்காலத் தலைவா் நியமன சா்ச்சை

மக்களவை இடைக்காலத் தலைவராக, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் இருந்து தொடா்ந்து 7-ஆவது முறையாக தோ்வான பா்த்ருஹரி மகதாப் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அதேநேரம், மக்களவை இடைக்கால தலைவா் பதவிக்கு கேரளத்தைச் சோ்ந்த 8 முறை காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷை நியமிக்காமல் புறக்கணித்துவிட்டதாக, மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்தது. கொடிக்குன்னில் சுரேஷ் தலித் என்பதால், அவா் புறக்கணிக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், மக்களவைக் கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.