பிகார் முதல்வர் நிதீஷ் குமார் 
இந்தியா

நிதீஷ் குமார் தலைமையில் நாளை தேசிய செயற்குழுக் கூட்டம்!

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் நடைபெறும்....

PTI

தலைநகர் தில்லியில் நாளை(ஜூன் 29)ல் நடைபெற உள்ள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒருநாள் முன்னதாகவே பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதீஷ் குமார் இன்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.

நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 29-ல் நடைபெற உள்ள தேசிய செயற்குழுக் கூட்டம் தலைநகரில் உள்ள நிதிஷ் குமாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறுகிறது.

ஜேடியூவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களை நிதிஷ் குமார் இன்று மாலை சந்திக்க உள்ளதாக கட்சியின் தேசியத் தலைவரான குமார் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், ஜேடியு தலைவர்கள் உள்பட கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், லல்லான் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங், ராம்நாத் தாக்கூர், பிகார் மற்றும் பிற மாநிலங்களின் மூத்த தலைவர்கள். கலந்துகொள்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது, ​​சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், 2025ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான உத்திகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்படும்.என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT