வியாழக்கிழமை தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை தொடர்ந்துவருவதால் தில்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுமையம் தில்லியில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் மறுநாள் (இன்று0 காலை 8.30 மணி வரை 228 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக தெரிவித்துள்ளது. 1936-க்கு பிறகு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவை தில்லி சந்தித்து வருவதாக வானிலை மையம் குறிப்பிட்டது.
ஜூன் மாதத்தில் வழக்கமாக 80.6 மிமீ மழையை தில்லி பெறும். தற்போதைய வெள்ளம் தேக்கம் நகரின் கட்டுமானத்திலும் குறிப்பாக கழிவுநீர் வடிகால் அமைப்பிலும் உள்ள போதாமையை காட்டுகிறது.
தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஜூன் 18-ம் தேதி தில்லி பருவமழையை சந்திக்க தயாராக உள்ளதாக பேட்டி கொடுத்திருந்தார். வெள்ளநீர் வடிகால் தூய்மையாகவும் தயாராகவும் உள்ளதாகவும் இடர்பாடுகளின்றி பருவமழையை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாள்களாக பெய்த மழையால் தில்லியின் முக்கிய சந்திப்புகள் பலவற்றிலும் இரண்டு முதல் மூன்று அடிக்கு நீர் தேங்கியுள்ளது.
நொய்டாவிலும் இதே நிலை நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையால் வழக்கத்தை விட 3.2 டிகிரி குறைந்து 24.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
இரண்டு மாதங்களாக நிலவிவந்த கடுமையான வெப்பத்தை தணிப்பதாக மழை இருப்பினும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.