நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் Center-Center-Delhi
இந்தியா

நீட் முறைகேடு: புகார் அளிக்க உயர்நிலைக் குழு அமைப்பு

நீட் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க உயர்நிலைக் குழு அமைத்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.

DIN

புது தில்லி: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்திருக்கும் புகார்களைத் தொடர்ந்து, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் செய்வதற்காக தேர்வுகள் தொடர்பான புகார்கள் மற்றும் மாணவர்களின் பரிந்துரைகள், கருத்துகளையும் அளிக்க உயர்நிலைக் குழு அமைத்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.

மே மாதம் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டுப் புகார்கள் எழுந்து, அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மாணவர்களிடமிருந்து புகார்களைப் பெற உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நீட் முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழுவிடம் புகார் அளிக்கலாம். வரும் ஜூலை 7ஆம் தேதி வரை நீட் தேர்வர்கள், மாணவர்கள், பெற்றோர் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பான புகார்கள் மட்டுமின்றி, பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தெரிவிப்பதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டுள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களும் நீட் விவகாரம் எதிரொலித்துள்ளது. இந்த நிலையில், மக்களிடமிருந்து புகார்களைப் பெற உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருக்கும் இந்த உயர்நிலைக் குழு, தேர்வர்கள், கல்வியாளர்களிடமிருந்து பொதுவான கருத்துகள், யோசனைகள், பரிந்துரைகளைப் பெறும். மேலும், மக்கள் தங்களது கருத்துகளை மைகவர்மென்ட் இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடுப் புகாரைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறவிருந்த நெட் தேர்வு மற்றும் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT