முகப்பு
இந்தியா

திருமண நாள் பரிசளிக்காத கணவருக்கு கத்திக்குத்து!

பெங்களூருவில் திருமண நாளன்று கணவர் பரிசளிக்காததால் ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் குத்தியுள்ளார்.

Updated On : 5 மார்ச், 2024 at 2:53 PM
கத்திக்குத்து
பகிர்:

பெங்களூருவில் திருமண நாளன்று கணவர் பரிசளிக்காததால் ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்லந்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 37 வயதுடைய பிரகாஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மனைவி காயத்ரியுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார். பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இந்த தம்பதிக்கு கடந்த பிப். 27 அன்று திருமண நாள் வந்துள்ளது. ஆண்டுதோறும் பரிசளிக்கும் கணவர் இந்த முறை பரிசளிக்காததால் காயத்ரி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், பிரகாஷ் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, காயத்ரி சமையல் அறையில் இருந்த கத்தியால் பிரகாஷை குத்தியுள்ளார்.

தொடர்ந்து, தாக்குவதற்குள் வீட்டைவிட்டு பிரகாஷ் வெளியேறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பிரகாஷுக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பெல்லந்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த காவலர்கள், காயத்ரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“காயத்ரி மீது மார்ச் 1ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது குடும்பப் பிரச்னை என்பதால் இருவரும் ஆலோசிக்க நேரம் கொடுத்துள்ளோம். முதல்கட்ட விசாரணையில் திருமண நாளுக்கு பரிசளிக்காததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் பரிசளிக்கும் பிரகாஷ், தனது தாத்தா இறந்ததால் இந்த ஆண்டு பரிசளிக்காமல் இருந்துள்ளார். தனது மனைவிக்கு வேறு சில பிரச்னை இருப்பதாகவும், அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும் பிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.