சம்பாய் சோரன் (கோப்புப் படம்) 
இந்தியா

விதவை மறுமண ஊக்கத்தொகை: முன்மாதிரியாக மாறிய ஜார்க்கண்ட்

விதவை மறுமண ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி நாட்டுக்கே முன்மாதிரியாக மாறியிருக்கிறது ஜார்க்கண்ட்.

DIN

ராஞ்சி: விதவைகள் மறுதிருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், விதவை மறுமண ஊக்கத்தொகை திட்டத்தை ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் அறிமுகப்படுத்தினார்.

கணவர் இறந்ததும், மறுமணம் செய்யும் விதவைகளுக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இதுபோன்ற ஒரு திட்டததைக் கொண்டு வரும் முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் மாறியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள், திருமண வயதை எட்டியிருக்க வேண்டும், அரசு ஊழியராகவோ, ஓய்வூதியம் பெறுபவராகவோ, வருமான வரி செலுத்துபவராகவோ இருக்கக் கூடாது.

ஒரு விதவை மறுமணம் செய்து ஓராண்டுக்குள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கணவரின் இறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணவரை இழந்த பெண்கள், தங்களது பிள்ளைகளைப் பராமரிக்கவும் பொருளாதார அளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, மாநில குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT