கோப்புப் படம்
கோப்புப் படம் IANS
இந்தியா

ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: 27 இடங்களில் சோதனை!

DIN

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்திின் நெருங்கிய நண்பர் அமித் கத்யால் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டை விசாரித்து வரும் அமலாக்கத்துறையினர், அந்த வழக்குத் தொடர்புடைய பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே பணி பெற்று தர மத்திய அமைச்சராக இருந்த லாலு சார்பாக லஞ்சமாக நிலம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமித் கத்யால் கடந்த நவம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது, பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கிருஷ்ணா பில்டுடெக் பிரைவேட் லிமிடட் தொடர்புடைய 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்யாலின் தெற்கு தில்லியில் உள்ள ஏகே இன்போ சிஸ்டத்தின் அலுவலக்ம் தேஜஸ்வி யாதவின் குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 31-ல் அமலாக்கத்துறையால் ராஷ்டிரீய கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் ரூ.6.02 கோடி மதிப்புடைய ஆறு அசையா சொத்துகள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT