இந்தியா

அதானி குழும பங்குகள் 10% சரிவு! ரூ.90,000 கோடி வரை இழப்பு!!

DIN

இந்திய பங்குச்சந்தை வணிகத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் 10 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்தது. இதன்மூலம், அதானி குழும பங்குகளின் மொத்த மூலதன மதிப்பில் ரூ.90,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது, அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பில் 5.7% ஆகும்.

இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்றும் பெரும்பாலான பங்குகள் சரிவையே சந்தித்து வருகின்றன.

இதில் அதானி குழுமத்திலேயே அதிகபட்சமாக அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் பங்குகள் 13% சரிந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் 8 சதவிகிதமும், அதானி வில்மர் பங்குகள் 4 சதவிகிதமும் சரிந்துள்ளன. ஏசிசி மற்றும் அம்புஜம் சிமென்ட்ஸ் பங்குகளும் 4 சதவிகிதம் வரை சரிவடைந்துள்ளன.

இதன்மூலம் அதானி குழுமத்தின் மொத்த மூலதன மதிப்பில் ரூ.90,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இது நேற்று 15.85 லட்சம் கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT