இந்தியா

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

DIN

பெங்களூரு: 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சதாசிவ நகர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்பதற்காக தனது 17 வயது மகளுடன் சென்றபோது, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்தார்.

17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக எடியூரப்பா கூறுகையில், சம்மந்தப்பட்ட சிறுமி, அவரது தாயாருடன் சில நாள்களுக்கு முன் ஏதோ பிரச்னை என்று எனது வீட்டுக்கு வந்தனர். நானும் தனிப்பட்ட முறையில் காவல் ஆணையரை அழைத்து அவர்களுக்கு உதவுமாறு கூறினேன். இந்த நிலையில் சிறுமியின் தாய் எனக்கு எதிராக பேசத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன்.

நடந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்த நிலையிலும் என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமில்லை என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

48 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

அல்-ஜசீரா அலுவலகங்களில் திடீர் சோதனை!

SCROLL FOR NEXT