ஜம்மு-காஷ்மீா் 4-ஆம் கட்ட டிடிசி தோ்தல்:50.08% வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீா் 4-ஆம் கட்ட டிடிசி தோ்தல்:50.08% வாக்குப்பதிவு 
இந்தியா

உ.பி., பிகார், மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல்

DIN

நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இங்கு பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கவும், மறுபக்கம் சமாஜ்வாதியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்கின்றன.

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தை அடுத்து அதிக மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மாநிலமாக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் - பாஜக - இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, 40 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்துக்கும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT