மக்களவைத் தேர்தல்: தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள்
மக்களவைத் தேர்தல் தேதி அறிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமை (மாா்ச் 16) முதல் நடைமுறைக்கு வந்தன.
தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், மாநில அரசு என அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
ஆவணமின்றி ரூ.50,000 மேல் எடுத்துச் சென்றால், பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பறக்கும் படையினர் 8 மணி நேரத்தின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.