முகப்பு
இந்தியா

நீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளிக்காத பாபா ராம்தேவ்: நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated On : 20 மார்ச், 2024 at 2:04 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 9:15 PM

புது தில்லி: நீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளிக்காத யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதின் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்கு பாபா ராம்தேவும் பாலகிருஷ்ணாவும் பதிலளிக்காதது நீதிபதிகளின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரும் தங்கள் பதிலை புதன்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் அடுத்த விசாரணையின்போது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.