முகப்பு
இந்தியா

பிகாரில் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி!

பிகாரில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

Updated On : 22 மார்ச், 2024 at 11:12 AM
பகிர்:

பிகாரின் சுபாலில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்த விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

இன்னும் 30 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இடிபாடுகளில் சிக்கி கொண்டர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

பிகாரின் சுபாலில் கோசி ஆற்றின் மீது ரூ. 984 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.