பூடானில் மோடி 
இந்தியா

பூடானில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பூடானில் பிரதம மந்திரி மோடிக்கு உள்ளுர் மக்களின் உற்சாக வரவேற்பு!

இணையதளச் செய்திப் பிரிவு

பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பரோவில் இருந்து தலைநகர் திம்பு வரையிலான 45 கிமீ தொலைவுக்கு காத்திருந்த பூடான் மக்கள் இரு நாட்டுக் கொடிகளும் அசைத்து மோடியை வரவேற்றனர்.

மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மோடி, அவரை வரவேற்க வந்திருந்த குழந்தைகளுடன் நடந்து சென்றார்.

பூடானில் மோடி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் விரைந்துள்ள மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே தழுவி வரவேற்றார். பாரம்பரியமிக்க பூடானிய துண்டை (ஸ்கார்ப்) பரிசளித்தார்.

இந்த பயணத்தில் இந்தியாவின் உதவியுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் நல மருத்துவமனையை மோடி திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், பூடான் மன்னர் நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமா் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

SCROLL FOR NEXT