முகப்பு
இந்தியா

ஹோலி கொண்டாட்டத்தில் பலியான நபர்: என்ன காரணம்?

முன்விரோதம் காரணமாக ஹோலி விழாவில் ஒருவர் உயிரிழப்பு

Updated On : 26 மார்ச், 2024 at 3:12 PM
மாதிரி படம் - IANS
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஒருவர் பலியாகியதாக செவ்வாய்கிழமை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரைத் தாக்கி கொன்றவர்கள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்விரோதம் காரணமாக அவர்கள் இதனை செய்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

35 வயதான் சூரஜ்பால் என்பவர் பலியாகியுள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின்போது லக்பத் சிங் என்பவருக்கும் இவருக்கும் சண்டை உருவாகியுள்ளது.

Advertisement

குடும்பங்களிடையே இருந்த பழைய விரோதத்தால் மோதல் உருவாகியதாகவும் லக்பத் சிங் என்பவர் தர்மேந்திரா, தினேஷ் ஆகியோர் உதவியுடன் செங்கல் மற்றும் இரும்பி கம்பிகள் கொண்டு சூரஜ்பாலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பலத்த காயம்பட்ட சூரஜ்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.