முகப்பு
இந்தியா

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்திருந்தார்.

Updated On : 6 மே, 2024 at 2:49 PM
ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் - DOTCOM
பகிர்:

ஒடிஸாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒடிஸா மாநிலம் பெஹ்ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை பேசிய மோடி, “ஜூன் 4, பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள். அன்றைய தினம் பாஜகவின் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். புவனேஷ்வரில் ஜூன் 10-ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வுக்கு தற்போதே உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விமர்சித்த நவீன் பட்நாயக், “ஒடிஸாவில் ஆட்சி அமைப்போம் என்று பகல் கனவு காண்கிறது” என்று தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் இரண்டு கட்டங்களாக வருகின்ற மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.