இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாதுகாப்புப் படையினருடன் நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

DIN

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த திங்கள்கிழமை குல்கம் மாவட்டம் ரெட்வனி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இதேபோல, கதுவா மாவட்டத்தில் கடந்த மே 1 ம் தேதி பயங்ரவாதிகளுடனான தாக்குதலில் கிராம பாதுகாப்பு அலுவலர் கொல்லப்பட்டார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 29 ம் தேதி 2 தீவிரவாத அமைப்புகள் எல்லைகள் வழியாக ஊடுருவியிருப்பதாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் ஜெயின் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT