இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை பதிய தில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை வீதிகளில் இறங்கி மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதன் தொடர்ச்சியாக ஜுன் 15-ம் தேதி பிரிஜ் பூஷண் மீது தில்லி போலீஸார் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டால் முன்னாள் எம்.பியான பிரிஜ் பூஷண், பாஜகவில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
ஆறு மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷண் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.