75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு
பிரதமர் மோடியும் அடுத்தாண்டு ஓய்வுபெற்றுவிடுவாரா என்று ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாஜவின் மூத்த தலைவர்களுக்கு 75 வயதாகிறது என்று கட்டாய ஓய்வளிக்கும்போத, பிரதமர் மோடியும் அடுத்தாண்டு ஓய்வுபெற்றுவிடுவாரா என்று ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாஜகவின் மூத்த தலைவர்களாக இருந்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஆகியோர், 75 வயதாகிவிட்டது என்று காரணம் கூறி கட்டாய ஓய்வளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 74 வயதாகிறது, அவருக்கு இன்னும் ஓராண்டுதான் உள்ளது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெடடி, பிரதமர மோடிக்கு விரைவில் 74 வயதாகப்போகிறது. அடுத்த ஆண்டு அவருக்கு 75 வயதாகிவிடும். எனவே, பாஜகவைப் பொறுத்தவரை 75 வயதாகிவிட்டால் ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்பது கொள்கை. அப்படிச்சொல்லித்தானே, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். தற்போது மோடிக்கு 74 வயதாகிறது. இப்போது நான் அவரிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன், 75 வயதில் ஓய்வு பெற தயாரா? என்று கேட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டும், அதாவது, 1947 - 2014 வரை 14 பிரதமர்கள் கிட்டத்தட்ட 67 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தனர். அவர்கள் நாட்டுக்கு 55 லட்சம் கோடிதான் கடன் பெற்றிருந்தனர். ஆனால், பிரதமர் மோடி மட்டும் 113 லட்சம் கடன் ஆக்கியிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த நாட்டையும் மோடி பாழாக்கிவிட்டார். நாடு இப்போது மிகப்பெரிய சீரழிவை சந்தித்துள்ளது. எனவே, அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர் எந்த விதமான ஆவணங்களையும் கொடுக்கலாம், ஆனால் யாரும் அதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், அவர் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்வார் என்று கூறியுள்ளார்.