இந்தியா

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 9 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு விவரம் வெளியாகியுள்ளது.

DIN

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்டமாக தோ்தல் (ஏப். 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, மூன்று கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன.

நான்காம் கட்டமாக 22 தனித் தொகுதிகள் உள்பட 96 தொகுதிகளில் தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, சுமார் 10.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரத்தில் 9.05 சதவிகிதமும், பிகாரில் 10.18 சதவிகிதமும், ஜம்மு-காஷ்மீரில் 5.07 சதவிகிதமும், ஜாா்க்கண்ட்டில் 11.78 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 14.97 சதவிகிதமும், மகாராஷ்டிரத்தில் 6.45 சதவிகிதமும், ஒடிஸாவில் 9.23 சதவிகிதமும், தெலங்கானாவில் 9.51 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 11.67 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 15.24 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ஜவுளித்துறை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

சென்னை உள்பட 7 நகரங்களில் அதிவேக ரயில் பாதை! - பட்ஜெட்டில் அறிவிப்பு

SCROLL FOR NEXT