உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாரணாசிக்கு திங்கள்கிழமை வந்த பிரதமர் மோடி, மாலையில் 6 கி.மீ. தொலைவுக்கு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பிரமாண்டமான வாகனப் பேரணி நடத்தினாா்.
இந்த நிலையில், வாரணாசி தொதியில் அவர் தொடர்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ள நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மனுதாக்கலின்போது உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.
வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சாா்பில் ஏ.ஜமால் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றாா். மொத்தம் பதிவான வாக்குகளில் இது 56 சதவீதமாகும். 2019 தோ்தலில் 6.74 லட்சம் வாக்குகளை அவா் பெற்றாா். மொத்த வாக்குகளில் இது 63 சதவீதமாகும்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1- வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.