ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள டாரு அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலாப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது.  
இந்தியா

ஹரியாணாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

ஹரியாணா மாநிலம் நூ வட்டம் டவுரு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து சனிக்கிழமை அதிகாலை

DIN

குருகிராம்: ஹரியாணா மாநிலம் நூ வட்டம் டவுரு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 8 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹரியானா குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து நூ வட்டம் டவுரு அருகே திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டம் டாரு அருகே சாலையில் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபது பேர் காயமடைந்தனர்.
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள டாரு அருகே சனிக்கிழமை அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபது பேர் காயமடைந்தனர்.

பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட அந்த பகுதி மக்கள், பேருந்தை துரத்திச் சென்று ஓட்டுநரை பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில், பேருந்தில் இருந்தவர்களில் 8 பேர் தீயில் கருகி பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பேருந்து தீப்பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்ப்பிணி வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் தனியாா் மருத்துவமனை முற்றுகை

தில்லியில் 2 வெவ்வேறு இடங்களில் தீ விபத்து

தில்லி யமுனை நதியை சுத்தம் செய்வதில் ரூ.6,856 கோடி ஊழல்!

என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவை: மாவட்ட ஆட்சியா் தகவல்

SCROLL FOR NEXT