கோப்புப்படம் 
இந்தியா

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் மே 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மே 24 ஆம் தேதி காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதனால் வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மே 24, 25 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மே 23 ஆம் தேதிமுதல் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும், மே 24 ஆம் தேதிமுதல் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT