இந்தியா

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

துபையில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் மீது ஃபிளமிங்கோ பறவைக் கூட்டம் மோதியதில் சுமார் 40 பறவைகள் இறந்தன.

DIN

துபையில் இருந்து மும்பைக்கு வந்த எமிரேட்ஸ் இகே508 விமானம் தரையிறங்கும்போது ஃபிளமிங்கோ பறவைக் கூட்டத்தின் மீது மோதியதில், சுமார் 40 பறவைகள் இறந்தன.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் காயமின்றி இறங்கினர். இருப்பினும், துரதிருஷ்டவசமாக ஏராளமான ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தன.

இந்த சம்பவத்தில் விமானமும் சிறிது சேதமடைந்தது. இதன் விளைவாக, திங்கள்கிழமை இரவு துபை புறப்படவிருந்த இகே509 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில், ''எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காட்கோபர் கிழக்கில் லக்ஷ்மி நகருக்கு அருகில் நடந்த பறவை தாக்குதலால் குறைந்தது 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே பறவைகள் மீது மோதியதாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தெருநாய்கள் தரையில் அடிபட்டு விழுந்த சில பறவைகளை துரத்தின. மேலும், சிதறி விழுந்த சில பறவைகளின் உடல் பாகங்களும் உள்ளூர் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பறவையின் உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வனத்துறை வனவிலங்கு வார்டன் பவன் சர்மா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய பொருளாதார வளா்ச்சி சிறப்பாக இருக்கும்- உலக வங்கி கணிப்பு

தில்லி பாதுகாப்பு குறித்து காவல் துறை கூட்டம்

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT