தில்லி- மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி!
தில்லி-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: ஒருவர் பலி, 22 பேர் காயம்
ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்த படுக்கை வசதியுள்ள பேருந்து சாலை தடுப்பை தாண்டி கால்வாயில் கழிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்; 22 பேர் காயமுற்றுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் மயங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாலை 5.30 மணியளவில் தில்லி- மும்பை நெடுஞ்சாலையில் தாவ்சா பகுதிக்கு அருகில் பேருந்து கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அருகிலுள்ளவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்க உதவினர். பின்னர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாவ்சா மருத்துவமனைக்கு காயமுற்றவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்- 19 வயதான அங்கிதா எனத் தெரிகிறது. மேலதிக விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை.