இந்தியா

இந்திய-பாக். எல்லையில் 60 ட்ரோன்கள் பறிமுதல்- பிஎஸ்எஃப் நடவடிக்கை

பாக். எல்லையில் ட்ரோன்கள் சுட்டுவீழ்ப்பு: பிஎஸ்எஃப் தகவல்

Din

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி, நாட்டில் தோ்தல் நடத்தை விதிகள் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அமலுக்கு வந்தன. இதையடுத்து, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்துவரும் ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்படுகின்றன. அத்துடன், போதைப் பொருளை வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

பஞ்சாப் தரன் தாரன் மாவட்டத்தில் போதைப் பொருள்களுடன் 2 ட்ரோன்கள் வெள்ளிக்கிழமை சிக்கின.

இதேபோல், இந்த மாவட்டத்தின் விளைநிலங்களில் இருந்து கடந்த வியாழக்கிழமை ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கடந்த இரண்டரை மாதங்களில் 60 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டதாக, எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையில்தான் அதிக எண்ணிக்கையில் ட்ரோன்கள் சிக்கியுள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையானது, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்தையொட்டி அமைந்துள்ளது. பஞ்சாப் மட்டும் பாகிஸ்தானுடன் 553 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொண்டுள்ளது.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT