இந்தியா

மக்களவைத் தேர்தல்: வரலாறு காணாத அளவில் ரூ.1,100 கோடி பணம், நகைகள் பறிமுதல்!

2024 மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் இதுவரை ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

DIN

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் வரும் மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வருமானவரித்துறையினர் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள மே 30 ஆம் தேதிக்குள் ரூ.1,100 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது 2019 மக்களவைத் தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 390 கோடியைவிட 182 சதவீதம் அதிகமாகும்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை வெளியிட்ட நாளில் (மார்ச் 16) இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதில், கர்நாடகம் மற்றும் தில்லியில் அதிக அளவில் நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக ரூ.200 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.150 கோடியும், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா மாநிலங்களில் ரூ. 100 கோடி்க்கு மேல் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பணம், மது, பரிசுப் பொருள்கள், போதைப் பொருள்கள், நகைகள் மற்றும் வாக்காளர்களை கவரக்கூடிய பிற பொருள்களின் நடமாட்டத்தையும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அரசியல் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தும் கண்காணித்து வந்தனர்.

ரூ. 50,000-க்கும் மேல் பணமாகவோ அல்லது பத்தாயிரத்தும் மேல் மதிப்புள்ள புதிய பொருள்களையோ உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றால் அந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த பொருட்கள் தேர்தலுடன் தொடர்பில்லாதவை என்பதற்கான சரியான ஆவணங்களை அளித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் திருப்பி வழங்கப்படும். எனினும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அது கூடுதல் ஆய்வுக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT