முகப்பு
இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 3 வயது குழந்தை எரித்துக் கொலை!

ஒரே தெருவில் இருந்த 22 வயது உறவினர் வெறிச் செயல்

Updated On : 2 நவம்பர், 2024 at 1:00 PM
கோப்புப் படம்
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையில் (நவ. 1) 22 வயதான இளைஞர் ஒருவர், தனது உறவினரின் 3 வயது குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து, தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், குழந்தையை கொலை செய்ததுடன், உடலையும் எரித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தை காணாமல் போய்விட்டதாக குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இளைஞரிடமும் விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், குழந்தையைக் கொலை செய்ததாக இளைஞர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு நகரி எம்.எல்.ஏ. கலி பானு பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.