அசாதுதீன் ஓவைசி 
இந்தியா

திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம்கள் அறங்காவலர்களாக முடியுமா? ஓவைசி கேள்வி!

மத்திய வக்ஃப் கவுன்சிலில் கட்டாயமாக இரு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன்மொழியப்பட்டது குறித்து ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

மத்திய வக்ஃப் கவுன்சிலில் கட்டாயமாக இரு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு முன்மொழியப்பட்டது குறித்து மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களுடன் பேசிய எம்பி அசாதுதீன் ஓவைசி, ”முஸ்லிம்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர்களாக இருக்கமுடியாது என்றால், வக்ஃப் வாரியத்தில் எப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினராக இருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள 24 உறுப்பினர்களில் ஹிந்து அல்லாதாவர் ஒருவர் கூட இல்லை. தேவஸ்தானத்தின் புதிய தலைவர் அங்கு பணியாற்றுபவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மோடியின் அரசு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவில் கூறியிருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை உள்ளது.

வக்ஃப் மசோதாவில் இதனை ஏன் கொண்டு வருகிறீர்கள். திருப்பதி தேவஸ்தானம் எப்படி ஹிந்துக்களுக்கானதோ, அதுபோல வக்ஃப் வாரியம் முஸ்லிம்களுக்கானது. இதில், சமத்துவம் இருக்கவேண்டும்.” என்று பேசினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்த வியாழனன்று (அக். 31) திருப்பதியில் பணிபுரியும் பிற மத ஊழியர்களை வேறு துறைகளுக்கு மாற்றலாமா அல்லது விருப்ப ஓய்வு வழங்கலாமா என்பது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஓவைசி இவ்வாறு பேசியுள்ளார்.

வக்ஃப் வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வக்ஃப் சட்டம் தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற குற்றச்சாட்டுகளை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டதிருத்த மசோதா 2024-ல் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல், கடுமையான நிதிதொடர்பான ஆய்வுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்ட வழிமுறைகளை கொண்டு வர முயல்வதாகக் கூறப்படுகிறது.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024 தொடர்பான கூட்டுக் குழு, சட்டத்திருத்தம் குறித்து ஆய்வு செய்ய 5 இந்திய நகரங்களுக்குச் செல்ல இருப்பதாக மக்களவையில் அக். 31 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டுக் குழுவினர் கவுகாத்தி, புவனேஸ்வர், கொல்கத்தா, பாட்னா, லக்னௌ ஆகிய நகரங்களுக்கு நவம்பர் 9 முதல் 14 வரை ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT